ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தாம் எதிர்நோக்குவதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (07) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தஹர்ஷ டி சில்வா, பல சவால்களுக்கு மத்தியில் தான் நிதிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.