நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கவன ஈர்ப்பு ஏற்படுத்தியதையடுத்து சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
அது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
அனர்த்த நிலைமை தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கப்படக்கூடிய ஏற்பாடுகள் குறித்து அவர் இன்று குறிப்பாக வலியுறுத்தினார்.
“நாட்டை திவாலாக்க முடியாது. ஒரு அரசாங்கம் செய்வதற்கு ஒரு எல்லை உண்டு. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலங்கள் கட்ட வேண்டும். சாக்கடைகள் கட்ட வேண்டும். நமது பொருளாதார நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அதை அனுமதிக்க முடியாது. நாடு திவாலாகும்.,”
அங்கு, அரச பாதுகாப்பு அமைச்சரின் உரையை இடைமறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், ‘நட்டஈடு வழங்கப்படமாட்டாதா’ என அங்கு கேள்வி எழுப்பினார்.
கோபமடைந்த பிரமித பண்டார தென்னகோன் பின்வருமாறு பதிலளித்தார்;
“என்ன நஷ்டஈடு? நஷ்டஈடு வழங்குவோம். நீங்கள் அதனை மிரட்டிக் கேட்க வேண்டாம்… சும்மா இந்த சண்டி பாட் போடா வேணா.. கொடுக்கக் கூடிய இழப்பீட்டை அரசு வழங்கும். இது நாட்டு நிலவரத்தை மதிப்பிட்டு எடுக்கப்பட்ட அசல் முடிவு.. அதனால் சண்டி பாட் போட்டிட்டு வர வேணா. நாம் இந்த சண்டிக்கு எல்லாம் பயமில்ல. கேட்கும் இதை அரசாகிய நாம் முறையாக செய்ய வேண்டும்… அரசு செய்யும்..”