follow the truth

follow the truth

November, 23, 2024
Homeவிளையாட்டுஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்

ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்

Published on

இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஊடங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வனிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“.. 160 ஓட்டங்களுக்கும் அதிகமான ஓட்டங்களை இலக்காகக் கொண்டு அதனை நோக்கி சென்றமையே தமது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

எமது அணியின் பலம் பந்து வீச்சு. கடந்த போட்டிகளில் இரண்டாவதாக பந்து வீசி பல போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளோம். அதனால்தான் நாம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து. பந்து வீச்சில் எதிர் அணியை வீழ்த்த திட்டமிட்டோம். எமது இலக்கு 160 க்கும் அதிக ஓட்டங்களாக இருந்தது.

எனினும் இந்த மைதானத்தை பொருத்த வரையில் எமது ஓட்ட இலக்கு 130 ஆக இருந்திருக்க வேண்டும். அதனை பின்னரே சுதாகரித்தோம். இந்த மைதானத்தை பொறுத்த வரையில் 130 என்பது 180 க்கும் அதிகமான ஓட்டங்களுக்கு சமமாகும். எவ்வாறாயினும், இரண்டாவதாக பந்து வீசி நாம் பாரிய அழுத்தத்தை எதிரணிக்கு கொடுத்திருந்தோம்.

எடுத்த தீர்மானித்தில் உள்ள தவறை விட, எமது ஓட்ட இலக்கில்தான் தவறு உள்ளது என நான் நினைகிறேன்..” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூன்று வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று...

ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன சாதனை

சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்....

தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் இணையும் டெம்பா பவுமா

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா (Temba Bavuma) மீண்டும் இணைத்துக்...