follow the truth

follow the truth

April, 15, 2025
HomeTOP2டிக் டாக்கில் இணைந்த டிரம்ப்

டிக் டாக்கில் இணைந்த டிரம்ப்

Published on

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 77).

குடியரசு கட்சி தலைவரான இவர் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் அங்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே கடந்த வாரம் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தநிலையில் சீன செயலியான டிக் டாக்கில் டிரம்ப் புதிய கணக்கு துவங்கினார். அவரை டிக் டாக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
இவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

இந்தநிலையில் தற்போது அவரே டிக் டாக்கில் இணைந்துள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக் டாக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்காவில் நில நடுக்கம்

அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன்...

நெருப்புடன் விளையாடாதீர்கள் – யூனுஸ் அரசுக்கு ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை

பங்களாதேஷில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா...

பிள்ளையானுடன் கதைக்கக் கோரிய ரணிலின் கோரிக்கைக்கு CID மறுப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உடன் உரையாடுவதற்கான...