follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்குள் ஊடுருவியதா 'ஒமிக்ரோன்'?

இலங்கைக்குள் ஊடுருவியதா ‘ஒமிக்ரோன்’?

Published on

இலங்கைக்குள் ஒமிக்ரோன் பிறழ்வு உள்நுழைந்துள்ளதா என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவியுள்ள விதத்தை பார்க்கும் போது நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், இலங்கைக்கு தென்னாபிரிக்காவில் இருந்து நேரடியாக அதிகளவான மக்கள் வருவதில்லை. அதன் காரணமாக மற்றைய நாடுகளை விட நமது நாட்டுக்கு வருவது தாமதமாகக்கூடும். நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து மட்டுமே பகுப்பாய்வு செய்கிறோம். அந்த மாதிரிக்கு அகப்படும் வரையில் குறித்த வைரஸ் பிறழ்வு நாட்டில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது எனவும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸானது பல்வேறு வகையில் திரிபடைந்து பரவுகின்றது. இவை எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்புபெற சுகாதார வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றுவது முக்கியமென விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபை அடையாளம் காண்பது தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆய்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென மரபணு பகுப்பாய்வு முறையொன்றை துறைசார் நிபுணர்கள் கையாண்டுள்ளனர்.

நாட்டுக்கு வருகைத்தரும் வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்யும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தில் திருத்தம்

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும்...

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா...

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை...