follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1இலங்கையில் வறுமை விகிதம் 26% வரை உயர்வு

இலங்கையில் வறுமை விகிதம் 26% வரை உயர்வு

Published on

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 26% ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள் இல்லாத ஒரு பகுதி இருப்பதாகவும் அதனை 2032 ஆம் ஆண்டளவில் 10% ஆகக் குறைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டு மக்களின் துயரம் எனக்குப் புரிகிறது. இந்த நாட்டில் 2019 இல் 15% ஆக இருந்த பொது வறுமை இன்று 26% ஆக அதிகரித்துள்ளது. வருமான ஆதாரமும், கல்வி வசதியும் இல்லாத ஒரு பிரிவினர் உள்ளனர். அதன்படி, 2032ஆம் ஆண்டுக்குள் அதை 10% ஆகக் குறைக்க இப்போது ஒப்புக்கொண்டுள்ளோம்.

இது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை தொடர வேண்டும். இந்தப் பரவலான ஏழ்மைக்கு தீர்வு காணும் வகையில்தான் வாரிசுரிமையில்லா நில உரிமை வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

மேலும், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை அந்த குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு அந்த சொத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் புதிதாக சிந்திக்க வேண்டும்” என்றார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “லெஸ்லி தேவேந்திர சிங்கவலோகனயா” என்ற தலைப்பிலான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் ஹரினி சந்திப்பு

முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு...