இலங்கைக்கான மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கவுள்ளது.
அன்றைய தினம் இலங்கையின் கடன் தவணையை அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க X செய்தியில் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கடன் தவணையாக இலங்கைக்கு விடுவிக்கப்படவுள்ள கடன் தொகை 330 மில்லியன் டொலர்களாகும்.