2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட்ட நிலையில், பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அறிவியல் பிரிவில் (Science) அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா பெற்றுள்ளார்.
அதேபோல், கணிதப் பிரிவில் (physical Science) கொழும்பு ஆனந்த கல்லூரியை சேர்ந்த W.A சிராத் நிரோத முதலிடத்தை பெற்றுள்ளார்.
கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தை சேர்ந்த தசுன் ரித்மிக விதானகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 269,613 பரீட்சாத்திகளில் 173,444 பேர் (64.33%) பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமையுடையவர்கள் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.