follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1காஸா சிறுவர் நிதியம் - இதுவரை 127 மில்லியன் ரூபா நன்கொடை

காஸா சிறுவர் நிதியம் – இதுவரை 127 மில்லியன் ரூபா நன்கொடை

Published on

காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இன்று வரை 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

காஸாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அவலநிலை, குறிப்பாக தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட மனிதாபிமான உதவி வழங்குவதற்காக நிதியமொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய காஸாவிலுள்ள சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதியமொன்றை ஆரம்பிப்பதற்காக ,கடந்த இப்தார் கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றினால் ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபா நிதி முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவனத்தின் (UNRWA)ஊடாக 04-01-2024 ஆம் திகதி பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடைக்கு மேலதிகமாக, காசா சிறுவர் நிதியத்திற்கு பங்களிக்குமாறு வர்த்தக நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுடன் இலங்கையின் நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் என்பன கைகோர்த்தன.

மேலும், பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மே 31ஆம் திகதி வரை இதற்காக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு, மேற்கண்ட தொகையுடன், அதுவரை பெறப்பட்ட முழு நன்கொடைகளும் துரிதமாக ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் முகவர் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் ஹரினி சந்திப்பு

முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு...