ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் இருக்கிறார்களா என்பதை விசாரணை மேற்கொள்ள சிறப்பு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID), பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (TID), மாநில புலனாய்வுப் பிரிவு (SIS) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (STF) அதிகாரிகள் குறித்த சிறப்புக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்கள் கடந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியாவில் அண்மைக்காலமாக ISIS தொடர்பான கைதுகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உறுதியளித்துள்ளார்.