அத்தனகலு ஓயா, களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளில் இன்று (27) காலை நிலவரப்படி நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆறுகளில் நீர் மட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.