ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் இன்று (21) முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிஹான் குலதுங்க மற்றும் ப்ராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற சிவில் மேன்முறையீட்டு அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று மீள அழைக்கப்பட்டது.
அங்கு விஜயதாச ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி
குவேர டி சொய்சா நீதிமன்றத்தின் முன் உண்மைகளை தெரிவித்ததுடன்,
முறைப்பாட்டினை முழுமையாக நிராகரிக்காமல் திருத்தம் செய்வதற்கு மாவட்ட நீதிபதி அனுமதியளித்தமை சட்டத்திற்கு முரணானது என ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த முறைப்பாட்டினை நிராகரிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் பின்னர், பிரதிவாதி துமிந்த திசாநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, மனுதாரர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், அவருக்கு சட்டரீதியாக உரிமை கிடையாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அவரை எவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார்.
அதையடுத்து, மேலும் மனு விசாரணை நாளை (22) வரை ஒத்திவைக்கப்பட்டது.