follow the truth

follow the truth

April, 6, 2025
HomeTOP2மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

Published on

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய “பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்” மற்றும் “அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ” ஆகியவை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படியே இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது என்பதைக் கூற வேண்டும். கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இந்த இரண்டு சட்ட மூலங்களும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு சட்டமூலங்களிலும் பல தொழில்நுட்ப விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார போக்கை மாற்றாமல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மேலும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைப்பது, உலகளாவிய ஒத்துழைப்பை நன்கு பேணுவது மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியம். அது மாத்திரமன்றி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களில் மாறுதல் போன்ற விடயங்களும் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புதிய பொருளாதார ஆணைக்குழுவை நிறுவுவது, போட்டித்தன்மையில் முதலீடுகளை ஈர்ப்பது, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது, சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவது, தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழுவை நிறுவுவது மற்றும் ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களை ஸ்தாபிப்பது குறித்து இந்த சட்டமூலம் ஊடாக கவனம் செலுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்தச் சட்டமூலங்கள் மூலம் இறுதியில், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கும், கடன் கொடுப்பனவுகளை நிலைபேறான மட்டத்தில் பேணுவதற்கும், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை முகாமைத்துவம் செய்வதற்கும், கொடுப்பனவு சமநிலையை நிர்வகிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத் திசை சரியாக வழிநடத்தப்படுவதை நாம் எதிர்பார்க்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

மேலும், அரச நிதி முகாமைத்துவ சட்ட மூலம் ஊடாக பாரிய கருத்தாடல் எழுந்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருத்தமான சட்டக் கட்டமைப்பை முன்வைப்பது இதன் மூலம் இடம்பெறுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்” என்று பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...

இந்தியா – இலங்கை 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று(05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு...