follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP1"ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை" - இஸ்ரேல்

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

Published on

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லையில் அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. பல மணிநேர நீண்ட தேடுதலின் பின்னர் துருக்கியின் டிரோன்கள், ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதி செய்தது. அத்துடன் ரைசி உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் மரணம் உலக நாடுகளை உலுக்கி இருக்கிறது. இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் அதிதீவிரமாகி, இஸ்ரேல்- ஈரான் யுத்தமாக உருமாறிக் கொண்டிருக்கிறது. இதுவே 3-வது உலகப் போர் உருவாகவும் காரணமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் ஈரான் ஜனாதிபதியின் மரணத்துக்கு இஸ்ரேல்தான் காரணம்; இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் ரைசியை படுகொலை செய்துவிட்டதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசி ஹெலிகாப்டர் விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல; இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஆனாலும் உலக நாடுகள் இஸ்ரேல் மீதான சந்தேகப் பார்வையை விலக்க முடியாத நிலைமைதான் உள்ளது. கடந்த மாதம்தான் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரானின் தூதரகம் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இராணுவ தளபதி உள்ளிட்ட 13 வீரர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் ரைசியின் மரணம் நிகழ்ந்திருப்பதால் இஸ்ரேல் பக்கமே அனைத்து நாடுகளும் சந்தேகத்தை திருப்பிக் கொண்டிருக்கின்றன.

ஈரான் அதிபர் ரைசி மரணம்.. இடைக்கால அதிபராகும் முகமது மொக்பர்! யார் இவர்? என்ன செய்யப் போகிறார்?

1979-ம் ஆண்டு ஈரானில் மத அடிப்படையிலான இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு ஷியாக்கள் ஆட்சி அகற்றப்பட்டது. இஸ்லாமிய குடியரசு நாடாக ஈரான் உருமாறியது முதலே இஸ்ரேலுடனான உறவு சீர்குலைந்தது. 1990களுக்குப் பின்னர் பல்வேறு ஆயுதக் குழுக்களை ஈரான் உருவாக்கியது, பலஸ்தீன விவகாரத்தில் உறுதியான ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருப்பது உள்ளிட்டவை இஸ்ரேல்- ஈரான் இடையேயான பகைக்கு அடிப்படையான காரணங்களாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம்...

காணாமல் போன 6 பேர் ஜனாஸாக்களாக மீட்பு

இடைநிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற 2 ஜனாஸாக்கள் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளன. குறித்த மீட்புப்பணிகள் நேற்று இடைநிறுத்தி...

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் காலமானார். வேதாந்தி...