இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொம்பனித் தெருவில் உள்ள பிரபல வர்த்தக நிலையக் கட்டிடத்திற்கு அருகில் வைத்து ஈரான் தூதுவர் மீது தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.