follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மற்ற அதிகாரிகள் யார்?

Published on

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் பல மூத்த ஈரானிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.

அதில் உயிரிழந்த ஏனைய அதிகாரிகளான;

  • வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் (Foreign Minister Hossein Amirabdollahian)
  • கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி (East Azerbaijan Governor Malek Rahmati)
  • கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஈரானிய உச்ச தலைவர் முகமது அலி அலே-ஹஷேமின் பிரதிநிதி (Representative of the Iranian supreme leader in East Azerbaijan Mohammad Ali Ale-Hashem)
  • ஜனாதிபதி காவலரின் தலைவர் மெஹ்தி மௌசவி (Head of presidential guard Mehdi Mousavi)
  • ஹெலிகாப்டரின் விமானி, துணை விமானி மற்றும் பணியாளர்கள்

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடனான ஒரு நிகழ்வில் இருந்து ரைசியும் அவரது சகாக்களும் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரீப் (Javad Zarif), ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஹொசைன் அமிரப்துல்லாஹியனின் மரணங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அமிரப்துல்லாஹியனை “என் அன்பான சகோதரர்” என முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் விவரித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து பற்றிய செய்தி “வேதனையானது” என அவர் பதிவு செய்துள்ளார்.

“தியாகிகளை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. உயிர் தியாகிகளுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் அமைதி மற்றும் பொறுமையையும் ஈரானிய மக்களின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை நான் விரும்புகிறேன்.” என அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF உடனான 3வது கடன் மீளாய்வுக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய...

ஒரே நோக்கத்துடன் உழைத்து, தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற அர்ப்பணிப்போம்

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

ஜனாதிபதி செயலாளர் – ஜப்பான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று...