ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் பகுதியில் ஈரான் இராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை, இன்னும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.