இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிவிவகார செனட் குழு உறுப்பினர்கள் எலிசபெத் ஹோஸ்டுக்கு வழங்கிய பதில்கள் நாட்டுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செனட் குழு உறுப்பினர்களின் விசாரணைகளுக்கு அவர் அளித்த பதில்கள் தற்போது செனட் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அதில், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துதல், தூதரக உறவுகளை பேணுதல், அரசுடன் புதிய கொள்கைகளை அமுல்படுத்துதல், வெளிநாட்டு உள்ளிட்ட பல யோசனைகளை செனட் குழு முன் எலிசபெத் ஹோஸ்ட் முன்வைத்தார். நாட்டின் கொள்கை, வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான விவகாரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில;
“இலங்கையில் ஆய்வினை நடத்துவது எந்த நாட்டின் கப்பல் என்றும் தீர்மானிப்பது அமெரிக்கா தான். இதிலிருந்து விளங்குவது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இது தாக்கம் காட்டாது. அமெரிக்காவை சந்தோசப்படுத்தும் நாடுகளுக்கு இது தாக்கம் காட்டாது. இதிலிருந்து விளங்குவது இலங்கைக்கு எந்த நாட்டின் கப்பல் ஆய்வுக்கு வரவேண்டும் என்பதும் அமெரிக்கா தான் தீர்மானிக்கும். தொடர்ந்தும் அமெரிக்காவின் கீழ் இருந்தால் இலங்கை ஒரு சுயாதீன நாடாக முடியாது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் உடனடியாக அறிக்கையொன்றினை வெளியிட வேண்டும். மேலும், தூதுவர் எலிசபத் ஹோஸ்ட் அமெரிக்கா செனட் குழு முன்னிலையில் தெரிவிக்கையில், தனது எதிர்பார்ப்பு இலங்கையில் ஜுலி சங் இனது பாதையில் பயணிப்பதே என்று தெரிவித்துள்ளார். ஜுலி சங் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கழுத்தில் கைபோட்டுக் கொண்டு சென்று அவரையும் நாட்டையும் மீண்டும் எழுந்து நிற்க முடியாத படுகுழியில் தள்ளியது என்பதையும் நினைவு கூற வேண்டும். அவ்வாறு இருக்க எலிசபத் ஹோஸ்ட், ஜுலி சங் இனது வழியில் செல்லுமாயின் இலங்கைக்கு அபசரன என்று தான் கூற என்னால் கூற முடியும்”
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.