ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவும் நேற்றுமுன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை 07 சுற்றுப் பேச்சுக்கள் பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 26ஆம் திகதி அனுராதபுரம் கலாவெவ தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அன்றிலிருந்து தேர்தல் பிரச்சார வேலைத்திட்டம் தொகுதிவாரியாக ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.