இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக எந்தவொரு அமைச்சரும் நாடாளுமன்றில் இல்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியது அவசியமெனவும் சபாநாயகர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
எனவே, எதிர்வரும் நாட்களில் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு அழைக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளருக்கு சபாநாயகர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதி வருகைதரும் நாட்களில் மாத்திரம் அனைத்து அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு வருகை தருவதாக சுட்டிக்காட்டிய சபாநாயகர், எனவே எதிர்காலத்தில் ஜனாதிபதியை ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அழைக்க வேண்டிய நிலை உருவாகுமெனவும் குறிப்பிட்டார்.