follow the truth

follow the truth

December, 22, 2024
Homeலைஃப்ஸ்டைல்ஒரு நாளைக்கு பெண்ணுக்கும், ஆணுக்கும் இவ்வளவு கலோரி தேவையா?

ஒரு நாளைக்கு பெண்ணுக்கும், ஆணுக்கும் இவ்வளவு கலோரி தேவையா?

Published on

கலோரி… கலோரி… என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது.

வயது, பாலினம், எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் கலோரி அளவு மாறுபடும். ஒவ்வொரு உணவு வகைக்கும் கலோரி அளவு உண்டு. உதாரணத்துக்கு 100 கிராம் எடைகொண்ட ஆப்பிளில் 59 கலோரி இருக்கும். வாழைப்பழத்தில் 116 கலோரி, 300 கிராம் சாதத்தில் 346 கலோரிகள் கிடைக்கின்றன.

மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு குடும்பப் பெண் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என ஒரு மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்தால், 120 கலோரி செலவாகும். ஆனால், ஒரு ஆண் ஒரு மணி நேரம் ரன்னிங் செல்லும்போது, 470 கலோரிகள் செலவாகும். இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் கலோரிகளின் அளவு வித்தியாசப்படும்.

ஆண்களுக்கு

26-45 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 2,600 கலோரிகள் தேவைப்படுகிறது. சுறுசுறுப்பான ஆண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,800 முதல் 3,000 கலோரிகள் தேவை.

பெண்களுக்கு

26-50 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கலோரிகள் தேவைப்படுகின்றன.

சுறுசுறுப்பான பெண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் தேவைப்படும்.

20 வயதின் முற்பகுதியில் உள்ள பெண்களுக்கு தங்கள் எடையைக் கட்டுப்படுத்த அதிக கலோரிகள் தேவை, ஒரு நாளைக்கு சுமார் 2,200 கலோரிகள் அல்லது அதற்கும் அதிகமாக தேவைப்படலாம்.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,800 கலோரிகளுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது.

அதிக உடலுழைப்பைச் செலுத்தும், 55 கிலோ எடை கொண்ட ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2,210 கலோரிகள் தேவைப்படும் அதேநேரம் மிதமான உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களுக்கு 2,130 கலோரிகள் தேவைப்படும்.

உடல் உழைப்பு குறைவாக இருக்கும் பெண்களுக்கு 1,660 கலோரிகள் தேவைப்படும். இதுவே அந்த பெண் கருத்தரித்தால் 300-500 கலோரிகள் கூடுதலாகத் தேவைப்படும். பாலுாட்டும் பெண் என்றால் கூடுதலாக 500 – 600 கலோரிகள் தேவைப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘Paracetamol’ மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?..

காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பரசிட்டமால் (Paracetamol ) வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பரசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு...

சிக்கனின் இந்த பாகம் மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரியுமா?

அசைவ பிரியர்களிடையே சிக்கன் முதலிடத்தில் உள்ளது. சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள்...

குழந்தைகளுக்கு பிடிக்கும் ‘Sweet Milk Balls’

குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட்டை ஒருமுறை செய்து கொடுத்தால், அடுத்த முறை எப்போது செய்து கொடுப்பீர்கள் என்று ஆவலுடன் கேட்கும்...