ஆப்பிள் வெளியிட்டுள்ள iPad Pro விளம்பர வீடியோவுக்கு பலரும் ஆன்லைனில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பலரும் இந்த வீடியோ மனித முயற்சி மற்றும் பயனுள்ள கருவிகள் அழிக்கப்படுவது, மோசமான விளம்பரமாக அமைந்துள்ளது என கமென்ட் செய்து வருகின்றனர். வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், “ஆப்பிள் நிறுவனத்தில் எங்களது டி.என்.ஏ.-வில் கிரியேட்டிவிட்டி உள்ளது. இதன் மூலம் சாதனங்களை அழகாக வடிவமைத்து, உலகளவில் கிரியேட்டர்களை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எங்களின் குறிக்கோள் பயனர்கள் தங்களது கற்பனை மற்றும் யோசனைகளை ஐபேட் மூலம் வெளிப்படுத்த ஏராளமான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பது ஆகும். இந்த வீடியோவில் எங்களது மார்க் தவரிவிட்டது, மன்னித்துவிடுங்கள்,” என்று தெரிவித்துள்ளது.
Apple has apologized for its controversial “Crush!” iPad Pro ad, saying it “missed the mark with this video”
The ad sparked outrage from various creatives including actor Hugh Grant, who wrote “the destruction of the human experience, courtesy of Silicon Valley.” Apple has now… pic.twitter.com/sKPCBvDXVJ
— Apple Hub (@theapplehub) May 9, 2024