கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படும் நிகழ்வான 22ஆவது DSI Supersport Schools Volleyball Championship ஐ ஆரம்பித்து வைப்பதற்கான அறிவிப்பை DSI விடுத்துள்ளது.
இலங்கை கரப்பந்து சங்கம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலை கரப்பந்து சம்மே ளத்தின் ஆதரவுடன், நாட்டில் முன்னணி வகிக்கும் பாதணிகள் உற்பத்தியாளரான DSI இந்தப் போட்டிகளை ஒழுங்கமைத்து ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளது.
இலங்கை கரப்பந்து சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து 1999ஆம் ஆண்டு DSI ஆல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சம்பியன்ஷிப் ப போட்டியின் நோக்கம் கிராமிய மற்றும் நகர்ப்புற கரப்பந்து வீரர்களுக்கு ஒரு வாய்ப்பையும் தேவையான ஆதரவையும் வழங்குவதுடன் அவர்களுக்கு தேசிய தரத்தில் ஒரு தளத்தையும் வழங்கி தேசிய மற்றும் சர்வதே ச அரங்கில் அவர்களின் திறமைகளை வெளிக்காட்டவும். மேலும் அவர்களின் தொழில்சார் வாழ்க்கையினை மே ம்படுத்த உதவுவதே இதன் நோக்கம் ஆகும்.
தொடக்க நிலையிலிருந்து மொத்தம் 198 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன, பாடசாலைகளின் கரப்பந்து சம்பியன்ஷிப் கிட்டத்தட்ட 400 விளையாட்டு வீர்களின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. இந்த ஆண்டு, நாடு முழுவதிலுமிருந்து 4,000 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது த தொர்பில் துசித ராஜபக்ஷ, டி. சம்சன் அன்ட் சன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் தெரிவிக்கையில்;
“2024 DSI சுப்பர் ஸ்பபோர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப்பின் 22ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் என்பதால், DSI இற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது உள்ளது. திறமைகளை அங்கீகரிப்பதற்கான ஒரு கட்டமாக இது செ யல்படும் இந்த ஆண்டு போட்டிகளுக்கு அனுசரணையாளர்களாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் எங்களின் பாக்கியமாக கருதுகின்றறோம்.
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள், நமது நாட்டின் தேசிய விளையாட்டாக கரப்பந்தாட்டத்தை வளர்ப்பதிலும் பிரபலப்படுத்துவதிலும் DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் முக்கிய பங்கு வகிக்கும் என்பது எங்கள் நம்பிக்கையாகும்.” எனக் கூறினார்.
2024 ஜூன் 15, 16, 22, 23, 29, 30, ஜூலை 06, 07, 13, 14, 20, 21, ஆகிய திகதிகளில் மாவட்ட மற்றும் தேசிய அளவில் இப்ப போட்டிகள் நடைபெறும். அந்தந்த அணிகளைச் சேர்ந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வென்ற வீரர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். தேசிய அளவிலான போட்டிகள் 2024, ஓகஸ்ட் 07 முதல் 11 வரை நடை பெறும்.
இறுதிப் போட்டிகள் 2024 நவம்பர் 02, 03 இல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டுமை தானத்தில் நடைபெறும். வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் 11 வயதுக்குட்பட்ட ஆண், பெண், 13 வயதுக்குட்பட்ட ஆண், பெண், 15 வயதுக்குட்பட்ட ஆண், பெண், 17 வயதுக்குட்பட்ட ஆண், பெ ண், 19 வயதுக்குட்பட்ட ஆண், பெண் என போட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து DSI காட்சியறைகளிலும் கிடைக்கும்.
மேலதிக விபரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 011-2669344 எனும் இலக்கத்துடன் இலங்கை கரப்பந்து சம்மேளனத்தை தொடர்பு கொள்ளலாம். 25 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர் – பாடசாலை கரப்பந்து சங்கம் ஆகியன 0773329702 எனும் இலக்கத்துடன் சி.எல். குமாரவை தொடர்பு கொள்ளவும் அல்லது இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ். நாலகவை asnalaka@gmail.com எனும் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகில் உள்ள DSI காட்சியறைகளில் சமர்ப்பிக்க முடியும். சந்தைப்படுத்தல் பிரிவு இல. 257, ஹை லெவல் வீதி, நாவின்ன, மஹரகம எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும் முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2024 மே 31 ஆகும்.