follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுமியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி : அமைச்சரவை அனுமதி

மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி : அமைச்சரவை அனுமதி

Published on

சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்கன் டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருமான வரி செலுத்துவது தொடர்பான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும்...

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விசேட...

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் அழைப்பு

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குப்படுத்தல்...