குழந்தைகளை பிறிதொரு நபருக்கு தத்துக் கொடுப்பது நாட்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே அதற்குக் காரணம் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், பொருளாதார பிரச்சினைகள், திருமணத்திற்கு புறம்பான உறவுகள் போன்ற சமூக பிரச்சினைகளால் குழந்தைகளை வேறு நபர்களுக்கு வழங்குவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சராசரியாக ஆண்டுக்கு சுமார் 1700 குழந்தைகள் பிறருக்கு தத்தெடுக்கப்படுவதாக பதிவாளர் துறை தெரிவித்துள்ளது.
கணிசமான எண்ணிக்கையில் சிறுவர்கள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்), சட்டத்தரணி திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார்.
குழந்தைகளை வேறு நபர்களிடம் கொடுக்கும் பட்சத்தில், அது குறித்த தகவலை பதிவாளர் துறைக்கு பெற்றோர் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் கருக்கலைப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.