follow the truth

follow the truth

December, 3, 2024
Homeஉள்நாடுபிரபாலினிக்கு நோர்வேயில் சிறந்த இசை காணொளிக்கான விருது

பிரபாலினிக்கு நோர்வேயில் சிறந்த இசை காணொளிக்கான விருது

Published on

“ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த பாடல் இது. Youtubeல் 1million மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International tamil film festival பெருமையுடன் பிரபாலினிக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறது.

பிரபாலினி, ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Paramesh மற்றும் சங்கீத பூஷனம் Sivamalini Paramesh தம்மபதிகளின் மூத்த மகளாவார். இலங்கையின் 1968களில் முதல் தமிழிசைத்தட்டை தனது காதலிக்காக “உனக்குத்தெரியுமா நான் உன்னை நினைப்பது” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்ட பெருமைக்குரிய எமது பெருமைக்குரிய மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் அவர்களின் மகள் தான் இந்த பிரபாலினி பிரபாகரன். அவரது அம்மா அப்பா வழியில் இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வெளியிட காதலர் தினத்தில் களத்தில் குதித்த “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடல் மாபெரும் வெற்றியை கிடைக்க பெற்றுள்ளது.

பிரபாலினி பிரபாகரன் வெளியிட்ட Queen cobra என்ற ஆடியோ ஆல்பம் தொகுப்பில் இருந்து வெளியான வீடியோ ஆல்பம் இது. முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்டது.

ஒரு ஈழத்தமிழ் மகள் எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து, நடித்த பாடலும் இதுவாக மட்டுமே இருக்கிறது என்பதும் இந்தப்பாடலின் அடுத்த பெரும் சாதனை தான்.

இந்த பாடலின் தொழில்நுட்ப கலைஞர்கள் தழிழ்நாட்டை சேர்ந்தவர்கள். பெண் DOP வைஷாலி சுப்பிரமணியம், dance master Sai bharathi, editor prabhu எனும் பல பேர்கள் இணைந்து வேலை பார்த்துள்ளனர். இலங்கையை சேர்ந்த சுஜநிதன் hero வாக நடித்திருக்கிறார். இந்தப்பாடலை முழுமையாக இலங்கையில் தான் படம் படித்துள்ளனர்.

Norway International tamil film festival மிகவும் பெருமையுடன் பிரபாலினிக்கு இந்த விருதை வழங்கி வாழ்த்தியிருக்கிறது. நாமும் வாழ்த்தி பாராட்டுவோம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

77வது சுதந்திர தின விழா – ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட குழு

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று 77 வது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு...

இனவாதத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

இனவாதத்தை எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

பாராளுமன்ற உறுப்பினர் என்னை தாக்கினார் – அர்ச்சுனா குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர்...