மாலைதீவில் நேற்று (21) நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
அதன்படி, சீன ஆதரவு முயிசுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.
நாடாளுமன்றத்தில் 93 இடங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தில் தேர்தல் நடைபெற்றது.
42 பெண் வேட்பாளர்கள் உட்பட 368 பேர் போட்டியிட்டனர்.
தேர்தலில் வாக்களிக்க 280,000 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.