தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் சூழலில்,ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் புதிய நாடுகள் இணைந்து வருகின்றன.
இந்நிலையில் கனடாவில் 2 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.