follow the truth

follow the truth

November, 29, 2024
HomeTOP2ஈரானின் அணு உலைகளில் உலை வைக்குமா இஸ்ரேல்?

ஈரானின் அணு உலைகளில் உலை வைக்குமா இஸ்ரேல்?

Published on

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீனம் போர் காரணமாக இஸ்லாமிய நாடுகள் ஒரு புள்ளியில் இணைய தொடங்கி உள்ளன. அந்த வகையில்தான் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ளது. முக்கியமாக கடந்த சில மாதங்களுக்கு இஸ்ரேல் நடத்திய வைத்தியசாலை தாக்குதல் அந்த நாட்டிற்கே எதிராக திரும்பும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற வைத்தியசாலை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவி உள்ளனர். இதில்தான் வைத்தியசாலை தாக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 800 பேர் வரை பலியாகினர்.

இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன. சன்னி – ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவூதி – ஈரான் கூட இஸ்ரேலை இந்த விவகாரத்தில் ஒன்றாக கண்டிக்க தொடங்கி உள்ளன. முன்னர் சவூதி அரேபியா மௌனித்திருந்தது. இஸ்ரேல் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்திற்கு ஹெஸ்புல்லா உள்ளிட்ட போராளி குழுக்களை அனுப்பி உதவியது.

இதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் இராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது. பலஸ்தீன போரில் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீன போராளி குழுக்களுக்கு உதவிய நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது.

ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். , சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் இராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.

ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.

இதையடுத்து தற்போது இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் பலஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் இராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது

அந்நாட்டு ஜனாதிபதி,பிரதமர், இராணுவ தளபதி உள்ளிட்டோருக்கான உயர்மட்ட கூட்டத்தில் பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரானுக்கு பயங்கர பதிலடி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இது என்ன பதிலடி என்று தெரியவில்லை. இந்த பதிலடி மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – பலஸ்தீன போர், போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்வர்ண நாடு கிலோ நூறு ரூபாயிற்கு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள ஸ்வர்ண நாடு அரிசியின் மொத்த விலை தற்போது 25 இந்திய ரூபாவாக...

சம்பளம் வாங்கமாட்டோம் என்று உறுதியளிக்கவில்லை..- NPP எம்பி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28)...