தெற்கு காஸாவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து வீரர்களையும் திரும்பப் பெற இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை தாக்கியதை அடுத்து, கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியது. அப்போது, ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட சுமார் 130 இஸ்ரேலிய குடிமக்கள் காஸா பகுதியில் ஹமாஸின் பிடியில் உள்ளனர்.
இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தொடங்கி, பணயக்கைதிகளை விடுவித்து, ஹமாஸ் போராளிகளை வேரறுத்தனர்.
தெற்கு காஸாவில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், காஸா பகுதியின் எஞ்சிய பகுதிகளில் இராணுவ மோதல்கள் தொடர்வதாக இஸ்ரேலியப் படைகள் கூறுகின்றன.
உளவுத்துறையின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸா பகுதியில் நடவடிக்கைகளை முடித்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.