follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP2பலஸ்தீன் குறித்த இஸ்ரேலின் முகநூல் பதிவை நீக்கியது சிங்கப்பூர் அரசு

பலஸ்தீன் குறித்த இஸ்ரேலின் முகநூல் பதிவை நீக்கியது சிங்கப்பூர் அரசு

Published on

சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் நேற்று வெளியிட்டிருந்த முகநூல் பதிவு (Face Book Post) பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

அந்த முகநூல் பதிவில் “அல் குர்ஆனில் இஸ்ரேல் குறித்து 43 இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பலஸ்தீன் குறித்து ஒரு இடத்திலும் கூட கூறப்படவில்லை.
எனவே சகல தொல்பொருள், பழைய நாணயங்கள், தரவுகளை பார்க்கும் பொழுது இஸ்ரேலின் உள்நாட்டு நபர்களே யூதர்கள் என்பது உறுதியாகின்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சகல மதத்தவர்களும் அமைதியாக ஒற்றுமையாக வாழும் நம் நாட்டில் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான முகநூல் பதிவு எதுவும் இருக்க முடியாது எனவும் அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்தது.

இதற்கிணங்க சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் குறித்த முகநூல் பதிவை நீக்கியுள்ளது.

இது தொடர்பான தகவலை சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள் விவகார அமைச்சர் ஷண்முகம் ஊடகங்களுக்கு முன்னால் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இப்படியான ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை. இதனால் எங்கள் நாட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர். என்னுடைய அமைச்சின் மூலம் உடனடியாக இந்த பதிவை நீக்க வேண்டும் என நான் அறிவித்தேன். அதன் பின்னர் அவர்கள் நீக்கியுள்ளனர்.

அந்த பதிவு எந்த வியூகத்தில் பார்த்தாலும் பிழையாகவே உள்ளது. எங்கள் நாட்டு மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் உள்ளது அந்த பதிவு அமைந்துள்ளது. எங்கள் நாட்டு சிறுபான்மை பெரும்பான்மை என அனைவரது பாதுகாப்பையும் கருதி நாங்கள் இந்த பதிவை நீக்க உத்தரவிட்டோம்.

எங்கள் நாட்டுக்காக உழைக்கும் மக்களோடு ஒற்றுமையாக உள்ள யூதர்களும் சிங்கப்பூரில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது. இந்த பதிவினால் சிங்கப்பூரில் உள்ள யூதர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது..”

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேரை கைது செய்யுமாறு பங்களாதேஷ் நீதிமன்றம் உத்தரவு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை எதிர்வரும்...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...