follow the truth

follow the truth

November, 30, 2024
HomeTOP1வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீட்டிப்பு

வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீட்டிப்பு

Published on

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் இருப்பு வைக்கப்படுவதையும் நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது, இது 31ம் திகதியுடன் முடிவடையும்.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதியை மேலும் தடை செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிக வெங்காயம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா.

இந்தியா விதித்துள்ள இந்த தடையால், பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்தியா விதித்துள்ள தடையே பிரதான காரணமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும் புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360...

வருமான வரி செலுத்துவோருக்கான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன்(30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம்...

தென் கொரியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த...