follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடு2024ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி

2024ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி

Published on

2024 ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.17 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.

அதேநேரம் 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செயல்திறன் 1.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.95 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதுடன் 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 1.96 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய அரசியலமைப்பில் சுகாதாரம் மனிதனின் அடிப்படை உரிமையாக்கப்படும்

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக...

தென் மாகாணத்தில் 7,000 பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறியுள்ளனர்

காலி மாவட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழில்சார் பெண்களும் தென் மாகாணத்தில் சுமார் 7,000 பாலியல் தொழில்சார் பெண்களும்...

கம்பஹா ரயில் கடவை 3 நாட்களுக்கு மூடப்படும்

கம்பஹா 16வது மைல் புள்ளியில் உள்ள புகையிரத கடவை மற்றும் பிரதான புகையிரத பாதையின் ஜாஎல பாதை திருத்தப்பணிகளுக்காக...