இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் (17) 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன.
அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய, ரொமேஷ் களுவிதாரண, அசங்க குருசிங்க, ரொஷான் மஹாநாம, ஹஷான் திலகரத்ன குமார தர்மசேன, முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை அணிக்கு அர்ஜுன ரணதுங்க தலைமை தாங்கினார்.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, தனது வெற்றியில் அதிக நம்பிக்கையுடன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
இலங்கையின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா சார்பில் மார்க் டெய்லர் 74 ரன்களும், ரிக்கி பாண்டிங் 45 ரன்களும் எடுத்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று வரலாற்றுப் புத்தகத்தில் புதிய பக்கத்தை சேர்த்துள்ளது.
போட்டியை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.