follow the truth

follow the truth

November, 1, 2024
HomeTOP2"பொருளாதாரத்தை விழுங்கும் அந்தப் பெருச்சாளியை பிடித்தாலே போதும்"

“பொருளாதாரத்தை விழுங்கும் அந்தப் பெருச்சாளியை பிடித்தாலே போதும்”

Published on

“நிதி அமைச்சில் பொருளாதாரத்தை தின்னும் பெருச்சாளி ஒன்று உள்ளது. இந்த எலியைப் பார்த்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இற்குள் இருந்தது “குள்ள எலி”, நிதி அமைச்சிற்குள் கொழுத்த எலி உள்ளது. பொருளாதாரத்தினை “எலிக்காய்ச்சலில்” இருந்து காப்பாற்ற முதலில் இந்த எலியை சிக்க வைக்க வேண்டும்.” என சுதந்திர ஜனதா சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாவல கொஸ்வத்த ‘சுதந்திரம்’ தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை பதினொரு இலட்சத்திலிருந்து இருபது இலட்சமாக அதிகரிப்பதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இரண்டு அமைச்சரவை பத்திரங்களை முன்வைத்த போதிலும் நிதியமைச்சு பார்வையற்ற நோயாளியைப் போன்று செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“.. கடந்த திங்கட்கிழமை நிதியமைச்சகம் மசாலாப் பொருட்களின் மீள் ஏற்றுமதியை அனுமதிப்பதற்கான வர்த்தமானியை வெளியிட்டது. இதன் பின்னணியில் சதி உள்ளது. மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள், இஞ்சி, ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களில் இலங்கை முன்னணியில் உள்ளது.

எங்களது தேநீருக்கு செய்தது போலவே வெளிநாட்டில் இருந்து தரம் குறைந்த மசாலாக்கள் கொண்டு வந்து அதனை இலங்கைப் பொருட்களுடன் கலந்து Sri Lanka Brand ஆக மீள் ஏற்றுமதி செய்வதே நோக்கமாகும். இன்று நெல் வாங்குவதற்கு திறைசேரி பணம் தராது என நெல் சந்தைப்படுத்தல் சபை கூறுகின்றது. தனியார் வங்கிகளில் 8 சதவீத வட்டி வசூலிக்கப்படும். நெற்பயிர்களை அழித்து வர்த்தக மாஃபியாவைப் பின்பற்ற முயற்சிக்கின்றனர் ..”

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புத்தகத்தை நீங்கள் படித்தீர்களா என ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிடம் கேள்வி எழுப்பினர்.

“.. இது மிகவும் அர்த்தமுள்ள மொழியில் “Ghost Writer” என்பவரால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதன் பெயரை “69 இலட்சத்தின் கெட்ட கனவு” என்று மாற்ற வேண்டும். தேவையென்றால் “Nightmare of a Nation” என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.

மேலும், ஜனாதிபதியின் குளியாப்பிட்டிய பேச்சு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதே நாளில் அமெரிக்காவில் நடந்த OSKAR விருது வழங்கும் விழா மேடைக்கு ஜோன் சினா நிர்வாணமாக வந்ததாகவும், எங்கள் “சினா”வும் மேடையில் நிர்வாணமாக இருந்ததாகவும், இங்கு ஜோன் சினாவை சீன் ஜோனா என்று கூறினேன் அவ்வளவு தான்..” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பதில் அமைந்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக்...

NPP இல் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து சுமந்திரன் பச்சைக்கொடி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

அல்லாஹு அக்பர் சொல்லக் கூடாது.. தாலிபான்களின் அடாவடி

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக உலக அளவில் விவாதம் எழுந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது...