“டிக்டாக்” சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தினை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.
குறித்த சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அது சட்டமாக்கப்படுவதற்கு செனட் சபையின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்புடைய சட்டத்தின்படி, “டிக்டாக்” தாய் நிறுவனத்தின் அமெரிக்கக் கிளையைத் திரும்பப் பெற 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட உள்ளது.
இதனை நீக்காவிட்டால் அமெரிக்காவில் “டிக்டாக்” செயலி முடக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.