நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை தள்ளுபடி செய்ய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் இருப்பது அவசியம் என்று கருதியதால், ஜனாதிபதி தனது சம்பளத்தை தள்ளுபடி செய்ய விரும்புவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக, புதிதாக பதவியேற்றுள்ள உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மொஹ்சின் நக்வியும் தனது பதவிக்காலத்தில் சம்பளம் பெறுவதில்லை என முடிவு செய்துள்ளார்.