follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்

Published on

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர்.

ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.

ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன. தற்போது அங்கு வெறும் 40 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தை விட சுமார் 40% அதிகமாகும்.

அதுமட்டுமன்றி இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்படும். அதன்படி மொத்தாமாக ஒரு மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும்.

இந்த தீவில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும். வெளியாட்களுக்கு மட்டுமே இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

இங்கு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த பாடசாலையில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் 2 மாணவர்கள் முன்பள்ளி வகுப்பில் உள்ளனர். அவர்களின் வயது வெறும் 4.

இந்த பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இத்துடன் சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...