காஸாவில் விமானத்திலிருந்து வீசப்பட்ட உணவு பொட்டலங்கள் அடங்கிய பெட்டி, பாலஸ்தீன மக்கள் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உணவு பெட்டியின் பாராசூட் திறக்காததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பட்டிணியால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே உணவு தட்டுப்பாட்டை போக்க மனிதாபிமான அடிப்படையில் உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் வான்வழியாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று காசாவின் வடக்குப்பதியில் உள்ள ஷாதி என்ற பகுதியில் பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டபோது ஒரு பாராசூட் விரியாமல் உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்துள்ளது.
இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். அத்துடன் உணவுப் பொட்டலங்கள் மக்களின் தலையில் விழுந்து பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.