follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபெண் பா.உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு

பெண் பா.உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியீடு

Published on

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கௌரவிக்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்றது.

‘அவளுக்கான சமத்துவம் மற்றும் ஒப்புரவு’ என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மறைந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இந்த இலச்சினையின் அர்த்தத்தை ஒன்றியத்தின் உறுப்பினர்கள் விளக்கினர்.

அத்துடன், முன்னாள் மற்றும் தற்போதைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. உலகின் முதலாவது பெண் பிரதமரான மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக மற்றும் இந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு கௌரவம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகல பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அங்கத்துவ அட்டையும் கையளிக்கப்பட்டது.

அதன்பின், 1931ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்துப் பெண் உறுப்பினர்களினதும் புகைப்படங்களைத் தாங்கியதாக பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பதாகை சபாநாயகரினால் திரைநீக்கம் செய்யப்பட்டது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) ஆகியவற்றின் அனுசரணை மற்றும் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களின் குடும்பத்தினர், பாராளுமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...