follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2அநுர ஆட்சியில் ரைஸ் குக்கருக்கு தடை, விறகடுப்புக்கு முன்னுரிமை

அநுர ஆட்சியில் ரைஸ் குக்கருக்கு தடை, விறகடுப்புக்கு முன்னுரிமை

Published on

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் தவறானது என செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சதுரங்க அபேசிங்க பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

Chatham Street Journal இணைய அலைவரிசையில் இடம்பெற்ற அரசியல் உரையாடலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வதாக சுட்டிக்காட்டிய வருண ராஜபக்ஷ, இன்று மின்சார அடுப்புகளில் சமைப்பதை தடுப்பதற்கான உத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அந்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தின் பொருளாதாரக் கொள்கையின் கீழ் இது சுட்டிக்காட்டப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த கட்சியின் விஞ்ஞாபனத்தில், விறகினால் சமைக்க வேண்டிய உணவுகளை இன்று மின்சார அடுப்புகளில் சமைப்பதை தடுக்கும் வகையில் நடைமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அரசு மின்சார அடுப்புகளை கொண்டு வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விறகில் சமைப்பது சுற்றுசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பதை உலகமே ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த யோசனையின் பின்னணி என்ன என்று அவர் கேட்டார்.

இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக உலகத்தை 2% ஆக அதிகரிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தனது விஞ்ஞாபனத்தில் கூறுவதாகவும், அதற்காக தற்போதுள்ள வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை குறைந்தது அரை டிரில்லியன் டொலர்களாவது அதிகரிக்க வேண்டும் எனவும் வருண ராஜபக்ஷ, சுட்டிக்காட்டினார்.

இது முற்றிலும் சாத்தியமற்றது என்றும், சக்திவாய்ந்த பொருளாதாரம் எனக் கூறும் இந்தியாவும் கூட 1.8% வெளிநாட்டு வர்த்தகப் பங்கைக் கோருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதன் செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க, இந்த தகவல் தவறானது என ஒப்புக்கொண்டதுடன், எதிர்காலத்தில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

45454545 1

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...