இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களைப் பெற்றது.
கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 18 ஓவர்கள் ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது.
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 53 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடர் தலா ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கின்றது.
இந்தப் போட்டியின் நான்காவது ஓவரில், முதல் பந்திலேயே தலைமை நடுவரால் ஆட்டமிழந்ததாக அறிவித்த தீர்ப்பினை மூன்றாவது நடுவர் ஆட்டமிழக்கவில்லை என தெரிவித்தமை குறித்து முறைப்பாடு அளிக்க இலங்கை அணி தீர்மானித்துள்ளது.
போட்டி நடுவர் ஊடாக இது தொடர்பான முறைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக இலங்கை அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் நவீத் நவாஸ் தெரிவித்துள்ளார்.