follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றி

பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றி

Published on

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு வாய்ப்பளித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது

அணிசார்பில் அதிகபடியாக, குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், மெத்யூஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் சௌமியா சர்க்கார் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தநிலையில், அணி 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 53 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்க​மை 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...