follow the truth

follow the truth

January, 16, 2025
Homeலைஃப்ஸ்டைல்அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா?

அடிக்கடி இந்த இடத்துல வலிக்குதா?

Published on

தற்போது உலகெங்கிலும் மூளைக்கட்டியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்த மூளைக்கட்டியானது குழ்ந்தைகள் மற்றும் இளம் பருவனத்தினரிடையே அதிகம் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதுவும் அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் தலைமையிலான மத்திய மூளைக்கட்டி பதிவேட்டின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த 5 ஆண்டுகளில் மூளைக்கட்டி வழக்குகளானது 0.5 முதல் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவும் இந்த மூளைக்கட்டி வயதானவர்களிடையே குறைவாகவும், இளம் பருவனத்தினரிடையே அதிகமாகவும் காணப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த மூளைக்கட்டியின் அறிகுறிகள் குறித்து நிறைய பேருக்கு இன்னும் சரியாக தெரியவில்லை. இப்படி தெரியாமல் இருப்பதால், முற்றிய நிலையில் மூளைக்கட்டியை கண்டுபிடித்து, சில சமயங்களில் அதை சரிசெய்ய முடியாமல் உயிரை இழக்க நேரிடுகிறது. எனவே மூளைக்கட்டியால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்க, அதன் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழே மூளைக்கட்டி இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.

மூளைக்கட்டி என்றால் என்ன?
மூளைக்கட்டி என்பது மூளையில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படும் கட்டிகளை குறிக்கிறது. இந்த கட்டிகளானது தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் கட்டிகளாகவோ அல்லது தீங்கற்ற கட்டிகளாகவோ இருக்கலாம்.

இருப்பினும் மூளைப் பகுதியில் எந்த வடிவில் கட்டி இருந்தாலும், அது ஆபத்தானவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மூளையைச் சுற்றியுள்ள மண்டை ஓடு மிகவும் கடினமானது மற்றும் இந்த பகுதி ஒரு தடைசெய்யப்பட்ட பகுதியும் கூட.

இந்த பகுதியில் எந்த ஒரு செல்கள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தாலும், அது மூளையில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதுவும் மூளையில் கட்டிகள் வளரும் போது, அது மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்து, மூளையின் செயல்பாட்டை பாதிப்பதோடு, ஒரு கட்டத்தில் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த மூளைக்கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், எளிதில் அகற்றி உயிர்சேதத்தைத் தடுக்கலாம். மூளைக்கட்டிகளின் அறிகுறிகளானது கட்டி இருக்கும் இடம் மற்றும் அளவைப் பொறுத்தது. இப்போது மூளையில் கட்டிகள் இருந்தால் வெளிப்படும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.

தலைவலி
மூளையில் கட்டிகள் இருந்தால் வெளிப்படும் மிகவும் பொதுவான அறிகுறி தலைவலி. அதுவும் இந்த தலைவலியானது அடிக்கடி வருவதோடு, தீவிரமாகவும், தொடர்ச்சியாகவும் நீடித்திருக்கும். தற்போது தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாக இருப்பதால், நிறைய பேர் அதை புறக்கணித்துவிடுகிறார்கள். ஆனால் மூளையில் கட்டி இருந்தால் சந்திக்கும் தலைவலியானது, காலையில் எழுந்ததும் மோசமாக இருக்கும் மற்றும் தூங்கும் போது ஏற்படும். இது தவிர இருமல், தும்மல் அல்லது உடற்பயிற்சியின் போது மோசமாக இருக்கும்.

பார்வையில் மாற்றம்
உங்களுக்கு திடீரென்று பார்வையில் மாற்றம் தெரிகிறதா? அதாவது உங்கள் பார்வை சற்று மங்கலாகவோ அல்லது உருவங்கள் இரண்டாகவோ தெரிவது போன்று உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்புள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, சில மூளைக்கட்டிகள் பார்வை பிரச்சனைகளை அல்லது பார்வை இழப்பைக் கூட ஏற்படுத்தும். எனவே இந்த அறிகுறியிலும் கவனமாக இருங்கள்.

குமட்டல் மற்றும் வாந்தி
குமட்டல், வாந்தி போன்றவை பல காரணங்களால் ஒருவருக்கு ஏற்படலாம். இருப்பினும் அரிதான நேரங்களில், இவ்விரண்டும் மூளையில் உள்ள கட்டிகளின் அழுத்தத்தினால் கூட ஏற்படலாம். எனவே தலைவலியுடன், இவ்விரண்டு அறிகுறிகளையும் ஒருவர் அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

வலிப்பு
மூளையில் கட்டிகள் வளர்ந்தால், அது மூளையின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைத்து, வலிப்பு ஏற்பட வழிவகுக்கும். ஒருவருக்கு வலிப்பு தாக்கங்கள் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என்றாலும், இளைஞர்களுக்கு இப்டி அடிக்கடி ஏற்பட்டால், நரம்பியல் சோதனையை மேற்கொள்வதோடு, மூளையையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

பலவீனம் அல்லது உணர்வின்மை
மூளையில் வளரும் அசாதாரண கட்டிகளானது மோட்டால் நரம்பியல் பாதைகளை பாதிக்கின்றன. இதனால் உடலின் சில பகுதிகள் பலவீனமாவதோடு, சில சமயங்களில் உணர்ச்சியின்றியும் இருக்கக் செய்கின்றன. எனவே உங்களுக்கு அடிக்கடி உடலின் சில பகுதிகள் உணர்வின்மையுடன் இருப்பதை அனுபவித்தால், உடனே மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவியுங்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

பழையன கழிதலும் புதியன புகுதலும் : ரவி மோகனின் அறிவிப்பு

நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி அனைவரும் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனக்...

ABC ஜூஸ் தினமும் குடிக்கலாமா? எடைக்குறைப்புக்கு இந்த ஜூஸ் உதவாது

சிவப்பு நிறமும் சிறிது இனிப்பு சுவையும் கொண்ட பீட்ரூட், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காய். இதன் ஜூஸில் நிறைய...