ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என பலர் கருதினாலும் முதலில் பொதுத் தேர்தலே நடத்தப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால நண்பர் என்ற வகையில், தமக்கும் அவரது தீர்மானங்கள் தொடர்பில் ஓரளவு புரிந்துணர்வு இருப்பதாகத் தெரிவிக்கும் கிரியெல்ல எம்.பி, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்வார் என நம்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய சேனலொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலை நடாத்துவதன் மூலம் விசேட அரசியல் ஆதாயமொன்றை ஜனாதிபதி பெற்றுக்கொள்ளலாம் என நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.