தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுத் தளத்திலிருந்து தரவுகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.
அது தவிர சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கை ஜனவரி 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிட்டார்.