follow the truth

follow the truth

March, 14, 2025
HomeTOP1போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள் நால்வர் வைத்தியசாலையில்

போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள் நால்வர் வைத்தியசாலையில்

Published on

குருநாகல் – இப்பாகமுவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மரத்தடியல் மயங்கி விழுந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்படுகின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மூதூரில் இருவர் வெட்டிக் கொலை – விசாரணைகள் தீவிரம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்...