சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கெப்டன் மொஹமட் நபி ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை எட்டியுள்ளார்.
இது ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை முதலிடத்தில் நீடித்து வந்த பங்களாதேஷ் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்தில் உள்ளார்.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் மொஹமட் நபி பெற்ற சாதனை இன்னிங்ஸுடன் அவர் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துள்ளார்.