follow the truth

follow the truth

January, 4, 2025
HomeTOP2பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்

Published on

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசு அமைப்பதில் குழப்பம் நீடித்து வந்தநிலையில், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்தன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிலாவல் பூட்டோ அறிவித்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் தனது சகோதரரும் பாக். முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீஃபை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒரு அரசாங்கமாக, ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு பாதுகாக்கின்றோம்

தற்போதைய அரசாங்கம், ஒரு அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை முடிந்தளவு பாதுகாப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர்...

2024ல் வரலாற்று சாதனை படைத்த இறைவரித் திணைக்களம்

2024 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலித்துள்ளது. இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி...

சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

சீகிரிய பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு...