சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர், அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்றைய (15) தினம் அமைச்சரவையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், அதனைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள். கடன் பெறுவது குறித்து இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்